Type to search

மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு!

Tamil nadu

மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைப்பு!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக அனுமதியின்றி போராடிய வழக்கில் ஏற்கெனவே கைதாகி சேலம் சிறையில் இருந்த வளர்மதியை, மற்றொரு வழக்கில் கைது செய்த வடபழனி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.student valarmathi arrested puzhal jail

கடலூரைச் சேர்ந்த மாணவி வளர்மதி இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவர் சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்திய போது சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ல் வடபழனியில் நடந்த நிகழ்ச்சியில் இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் வளர்மதி பேசியதாகக் கூறி வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 26-ஆம் தேதி சேலம் சிறையில் இருந்தவரைக் கைது செய்த வடபழனி போலீசார் அவரை, நீதிமன்ற அனுமதியோடு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: