Type to search

பல்பு திருடி! பல்பு வாங்கிய கோவை கொள்ளையன்!

Tamil nadu

பல்பு திருடி! பல்பு வாங்கிய கோவை கொள்ளையன்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து ஒருவர் பல்ப் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காண்போர் வாய் விட்டுச் சிரிக்கும் அளவுக்கு உள்ளது இவரது செய்கைகள்.stealing bulb! bullet bought item pirate!

அடடா உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் இவருக்கு என்ன ஒரு அக்கறை… அதிகாலையில் எழுந்த உடனே இவ்வளவு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுகிறாரே?.. கட்டி தொங்க விடப்பட்டுள்ள பல்பை பிடித்து கூட தொங்குகிறாரே.. இவரது ஆர்வத்துக்கு அளவே இல்லையா? என்பது தான் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் பலரது எண்ணமாக இருக்கும்.

ஆனால் நேரம் கடக்க கடக்க தான் தெரிகிறது, இவரது இத்தனை நாடகமும் ஒரு பல்பை திருடுவதற்கென்று…

source : Polimer News

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வெளியே நின்று கொண்டு உடலை, வளைத்து வளைத்து உடற்பயிற்சி செய்த அந்த நபர், யாரும் இல்லாத நேரத்தில் தனது கடின முயற்சியால் பல்பை திருடி பேண்ட் பாக்கெட்டில் செருகி விட்டு புறப்பட்டுச் சென்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: