Type to search

சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!

INDIA India Top Story

சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!

Share

கடனை அடைப்பதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அமலாக்கத்துறையோ, சி.பி.ஐயோ எதிர்ப்புத் தெரிவித்தால் அது தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே இருக்கும் என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.requesting permission sell property! – vijay mallya check!

யுனைடெட் பிரிவரீஸ், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் உள்ளார். தனது நிறுவனங்களுக்காக வங்கிகளில் கடன்பெற்ற அவர் வட்டியும் முதலுமாக 13-ஆயிரத்துத் தொள்ளாயிரம் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்துவர சி.பி.ஐ முயன்றுவருகிறது.

இந்நிலையில், மொத்தக் கடனையும் திருப்பிச் செலுத்துவதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அனுமதி கோரிக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்தார்.

இந்தச் சொத்துக்களை விற்பதை அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எதிர்த்தால் தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags:

You Might also Like