Type to search

பேராசிரியை நிர்மலா தேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை!

Tamil nadu

பேராசிரியை நிர்மலா தேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{Professor Nirmala Devi}

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் சென்னையில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 17-ம் திகதி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இவரின் குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற அனுமதியுடன் நிர்மலாதேவியை மதுரை சிறைச்சாலையிலிருந்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்து வந்து புழல் பெண்கள் சிறை எண் மூன்றில் அவரை அடைத்தனர். சென்னையில் நிர்மலா தேவியிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடைபெறவுள்ளது.

நிர்மலாதேவி பேசிய ஆடியோவை ஒப்பிட்டு அவருடைய குரல் தொடர்பான பரிசோதனை நடைபெறவுள்ளது. புழல் சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியை வரும் 29-ம் திகதி மதுரை சிறைச்சாலைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அழைத்து செல்வர்.

Tags: Professor Nirmala Devi

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்!

*உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி! – அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு!

*முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!

*செய்தியாளர்கள் கைதானதால் சென்னையில் பரபரப்பு !!

*பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like