Categories: Tamil nadu

​பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை என்ற அறிவிப்பை அடுத்து கோவையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பசுமை பைகளின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.plastic products banned! – green bag started!

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள துணி பைகள், மண்ணில் மக்க கூடிய பிளாஸ்டிக் இல்லாத பசுமை பைகள், பேனா, பல் துலக்கும் பிரஸ் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து பசுமை பைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்துவதே அரசிற்கு சவாலாக இருக்கும் நிலையில் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கொண்டு வந்துள்ள பயோ பைகள் எனப்படும் பசுமை பைகளுக்கே மவுசு அதிகரித்து வருவதாக அங்காடி பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் மக்காச்சோளம், கப்பை கிழங்கு மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பைகள் மண்ணில் போட்டால் மூன்று மாதத்தில் மக்கிவிடும் என்றும் அவர்கள் கூறினர்.

அந்த பையில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் அனைத்திலும் ரசாயனம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பைகள் சுடுநீரில் கரையும் தன்மையுடையதாகவும், நெருப்பில் எரித்தால் சாம்பலாகவும் மாறும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

சுற்றுச்சூழல் மீதான அக்கறையோடும், பிளாஸ்டிக் பைக்களை தவிர்க்கும் நோக்கில் கோவையில் உள்ள பெரிய உணவகங்கள், சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைக்கு மாற்றான இந்த பயோ பைகளை உபயோகிக்க முன்வந்துள்ளனர்.

சமுதாயத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமது கடமை என்பதை உணர்த்தும் வகையில் பசுமை பைகளை மட்டுமே பயண்படுத்துவதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை மூலப்பொருட்களை கொண்டு பசுமை பைகளை தயாரித்து விற்கமுடியும் என்றும், பிளாஸ்டிக் பை தயாரிப்போர்கள், அவர்கள் தற்போது பயன்படுத்தும் இயந்திரங்கள் மூலம் பசுமை பைகளை தயாரிக்க இயலும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று பைகளை உபயோகித்து மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள கோவை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்க அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்க முடியும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

14 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

17 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

17 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

18 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

18 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

19 hours ago