Type to search

“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!

INDIA India Top Story

“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு படுதோல்வியை தழுவியிருக்கிறது என இந்திய டூடே இதழ் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.modi government fails set AIIMS – ED study!

2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 வரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட முழுமையாக அமைக்கப்பட வில்லை.

இதுகுறித்து இந்திய டூடே இதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மோடி அரசு தோல்வியை தழுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்திய டூடே இதழ் மோடி அரசால் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போதைய நிலை குறித்த தகல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறையிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தது. அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தரப்பட்டிருந்த தகல்களின் படி இதுவரை அனுமதி வழங்கப்பட்ட 5 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதனை அந்த மருத்துவமனைக் கட்டமைப்பு பணிக்காக வழங்க வில்லை. நிதி ஒதுக்கீடு செய்ததோடு சரி, அதனை அளிக்கவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஹிமாச்சல் பிரதேசம், பீகார், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை நிதி அளிக்கவில்லை.

அதிலும் ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க அனுமதி மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான எந்த நிதி ஒதுக்கீடும் இதுவரை செய்யப்படவில்லை. இந்த மருத்துவமனைகளுக்கு இதுவரை எப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற காலவரையறையும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதே நேரம் அதிகாரப்பூர்வமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாத நிலையில் 90. 84 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை.

ஆனால் 2020ல் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த உத்தரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 10 சதவிகிதம் நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக 2014 தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசம் :

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ ஆயிரத்து 11 கோடி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 98 கோடியே 34 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த மருத்துவமனை 2020 மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் 21 மாதங்களில் மீதமுள்ள 90 சதகிவித நிதி ஒதுக்கீடு செய்து, அதன் பேரில் மருத்துவமனை அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவேண்டும். இது நடக்க வாய்ப்பே இல்லை என திட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆந்திரப்பிரதேசம் :

ஆந்திரபிரதேசத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆயிரத்து 618 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்படும் என்றும். இந்த மருத்துவமனை 2020 அக்டோபர் மாதம் செயல்பட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 233. 38 கோடி மட்டுமே ஒதுக்கிடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டமும் 2020க்குள் செயல்பட்டிறகு வருவதற்கு வாய்ப்பில்லை.

மேற்கு வங்கம் :

மேற்கு வங்க மாநிலம் கல்யாணி என்ற இடத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ ஆயிரத்து 754 கோடி ரூபாயில் மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை அக்டோபர் 2020ல் செயல்பாட்டிற்கு வரவேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசு ரூ 278கோடிய 48 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. திட்டத்தின் படி இந்த மருத்துவமனை செயல்பாட்டிற்கு வர வேண்டுமானால் தடையின்றி முழு நிதியும் ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகள் முடித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

மகாராஷ்டிரா :

மகராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூரில் ரூ ஆயிரத்து 577 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரு 231 கோடியே 29 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அசாம் :

அசாம் மாநிலம் கம்ருப் மாவட்டத்தில் உள்ள ஜாலாக் என்ற இடத்தில் ரூ ஆயிரத்து 123 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடாக இதுவரை வெறும் 5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை 2021க்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

பஞ்சாப் :

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிந்தாவில் ரூ 925 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவமனைக்கு இதுவரை ரூ 36 கோடியே 57 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை 2020 ஜூன் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

ஹிமாச்சல் பிரதேசம் :

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் ரூ ஆயிரத்து 350 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2017 அக்டோபர் 3 அன்று அடிக்கல் நாட்டினார். அதோடு சரி இதுவரை எந்த நிதியும் அந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அடிக்கல் நாட்டிய கல் மட்டும் அப்படியே இருக்கிறது.

தமிழகம் :

தமிழகத்தில் தற்போதுதான் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை ரூ 1500 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டம் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலே தற்போதுதான் இடமே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் காலம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை.

ஜார்க்கண்ட் :

ஜார்க்கண்ட் மாநிலம் தேகார்த் என்ற இடத்தில் ரூ ஆயிரத்து 103 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது. இதற்கு இதுவரை ரூ 9 கோடி மட்டுமே நிதிவொதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை 2021ல் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் கூட இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த மருத்துவமனைகள் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்றும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய டூடே நாளிதழுக்கு வழங்கியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு வெறும் அறிவிப்புகளையே தனது சாதனைகளாக பறைசாற்றி வருகிறது. உண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் இந்த ஐந்து வருடத்தில் மோடி அரசு தோல்வியையே தழுவியிருக்கிறது. எந்த ஒரு திட்டமானாலும் அறிவிப்பு செய்வது பெரிய விஷயமல்ல. அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து உரிய காலத்தில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதே திட்டத்தின் வெற்றி அடக்கியிருக்கிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: