Type to search

இளம் இந்திய கிராண்ட் மாஸ்டரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழிசை!

India Head Line Tamil nadu

இளம் இந்திய கிராண்ட் மாஸ்டரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழிசை!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ Indian Grand Master met tamilisai }

சதுரங்க போட்டியில் உலகின் 2-வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டில் நடைபெற்ற க்ரெடின் ஓபன் சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா தனது 8-வது சுற்றில் உள்ளூர் வீரரை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், தரவரிசையில் முன்னேறிய அவர், 12 வயதில் க்ராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் 2-வது சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அவரை பாராட்டும் வகையில் சென்னை அடுத்த பாடி குமரன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரக்ஞானந்தாவின் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டு துறையில் இதுபோன்ற இளம் வீரர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் எனவும், மேலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Indian Grand Master met tamilisai

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like