Categories: Tamil nadu

பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!

சென்னை புரசைவாக்கம் கந்தப்பா ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் கிஷோர் (28). இவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. மனைவி பெயர் சித்ரா (26). இந்த தம்பதிக்கு கனிஷ்கா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.chennai 2-year-old girl dies pocket milk

நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சித்ரா தனது குழந்தைக்கு பாக்கெட் பாலை கொடுத்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே குழந்தை கனிஷ்கா தூங்கியது. அடுத்த சில நொடிகளில் குழந்தை திடீரென அலறியபடி மயங்கியது.

இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா தனது கணவர் கிஷோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு புரசைவாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் இதய துடிப்பு குறைவாக உள்ளது. உடனே குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றனர்.

அதன்படி சித்ரா தனது குழந்தையை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா தனது குழந்தையை கட்டிப்பிடித்து அழுதார்.

இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்தார். அதில், ‘குழந்தை பாக்கெட் பாலை மட்டுமே அருந்தியது, வேறு எதையும் அருந்தவில்லை. எனவே குழந்தை இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது’ என கூறியிருந்தார். அதன்படி வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால் குடித்ததால் புரை ஏறி குழந்தை இறந்ததா? அல்லது குழந்தை குடித்தது கலப்பட பாலா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குழந்தைக்கு அளித்த பால் பாக்கெட்டின் கவரை வாங்கி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 2 வயது குழந்தை பால் பாக்கெட்டில் உள்ள பாலை குடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

7 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

42 mins ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

1 hour ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

2 hours ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

2 hours ago

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர்…

2 hours ago