Type to search

தமிழகத்தை போராட்டக்களமாக மாற்றுவதற்கு சில கட்சிகள், அமைப்புகள் முயற்சி – முதல்வர் பழனிசாமி

India Head Line Tamil nadu

தமிழகத்தை போராட்டக்களமாக மாற்றுவதற்கு சில கட்சிகள், அமைப்புகள் முயற்சி – முதல்வர் பழனிசாமி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

alleged political parties organizations trying transform struggle

தமிழகத்தை சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டக்களமாக மாற்ற முயற்சித்து வருவதாக தமிழக முதல்வர் பழனிசாமி குற்றஞ் சாட்டியு ள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, பல பிரச்சினைகளை திறமையாக சமாளித்து வெற்றி பெற்று வருகிறது. இதைப் பார்த்து, அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், சிறிய குறைகளையும் பூதாகரமாக்கி அறிக்கைகள் விடுவது, போராட்டங்களை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒரு சிலர் தங்கள் தலையாய கடமையாக மேற்கொண்டுள்ளனர். அரசு எடுக்கும் முடிவுகளில் அல்லது செயல்பாட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால், அவற்றை பரிசீலித்து குறைகளை களைய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையினர் சட்டம், ஒழுங்கை சீரிய முறையில் பராமரித்து வருகின்றனர். மதம் மற்றும் வகுப்பு பூசல் ஏதுமின்றி, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பேணிக் காத்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சில சம்பவங்களைத் தவிர, பொது மக்களை பாதிக்கும் வகையில், எந்தவொரு சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் இல்லை. இது, மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கும் சட்டம், ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் சான்றாகும்.

காவல் துறையினர் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்ய தேவையான ஊக்கத்தை அரசு அளித்து வருகிறது. இதனால், இந்த அரசு மீது குறை கூற காரணம் ஏதுமின்றி, சில கட்சிகளைச் சார்ந்தவர்கள் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், பொது அமைதி பாதிக்கப்பட்டு விட்டது என்றும் உண்மைக்கு மாறாக தொடர்ந்து ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டிகள் அளித்தும் வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக நிலைகுலைந்துவிடும், ஆட்சிக்கு வந்துவிடலாம் என பகல் கனவு கண்டு வந்தவர்கள், அது இயலாமல் போகவே, எடுத்ததற்கெல்லாம் போராட்டம் என அறிவித்து வருகின்றனர். அன்றாடம் போராட்டங்களில் ஈடுபட்டு, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, தங்களின் குறிக்கோளை அடைய முயன்று தோல்வி கண்டனர். இவர்களின் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்பாடுகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு உத்வேகத்துடன் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தி, ஒரு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்ற முயற்சித்து வருகின்றன. இவர்களது உண்மையான நோக்கமே, மக்களை திசை திருப்பி அதில் அரசியல் ரீதியான லாபத்தை ஈட்ட முயல்வதுதான்.

இந்த சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து, பொதுமக்களும் எதிர்க் கட்சியினரும் பிற அமைப்பினரும் அரசின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு ஒத்துழைப்பும் ஆலோசனைகளையும் வழங்கி, மாநிலம் வளர்ச்சி அடைய அனைவரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

alleged political parties organizations trying transform struggle

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: