Type to search

மும்பையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி!

INDIA

மும்பையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ 5 killed crash Mumbai }

தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மும்பையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் காட்கோபர் என்ற இடத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானமானது, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் தீ பிடித்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள், 2 விமான பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தற்போது மும்பையில் விழுந்து நொறுங்கி 5 பேர் உயிரை பறித்த விமானம் ஏற்கனவே விபத்தில் சிக்கிய தகவல் தெரிய வந்துள்ளது.

உத்திரப்பிரதேச அரசுக்கு சொந்தமாக இருந்த இந்த விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச அரசிடமிருந்து யு.ஒய்.ஏவியேஷன் என்ற நிறுவனம் தற்போது விபத்தில் சிக்கிய இந்த விமானத்தை வாங்கியுள்ளது.

மேலும், மும்பையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கருப்புப்பெட்டி யில் பதிவாகியுள்ள தகவலை ஆராய்ந்தால் விபத்து நடந்த காரணம் தெரியவரும் என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: 5 killed crash Mumbai

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: