இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Share

பெண்களுக்கான மகப்பேறு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு . இதனால், சுமார் 11 லட்சம் முதல் 18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.18 lakh women risk shocking information india
`அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்குச் சலுகை வழங்க புதிய மகப்பேறு சட்டம் ஒன்றை அமல்படுத்தியது மத்திய அரசு. பணிபுரியும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தும்’ என ‘டீம்லீஸ் சர்வீசஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், `பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 12 வாரங்களாக முந்தைய மகப்பேறு சட்டத்தில் இருந்தது. இந்த விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து புதிய சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது.
பெண்களுக்குச் சலுகை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தினால் வேலை இழக்கும் சூழல் உருவாகும். சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு நீண்ட கால விடுமுறை அளிப்பது கடினம்.
இந்தச் சட்டத்தின் காரணமாக, பல நிறுவனங்கள் பெண்களை பணியமர்த்த யோசிக்கும் அல்லது குறைத்துக்கொள்ளும் அல்லது முற்றிலுமாக தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது. இந்த புதிய சட்டத்தால், அடுத்த நிதியாண்டுக்குள், சிறு, குறுதொழில்கள் உட்பட10 துறைகளில் பணிபுரியும் 11 லட்சம் முதல் 18 லட்சம் பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!