Type to search

கழுத்து எலும்பு உடைந்த பாம்புக்கு ஸ்கேன் பரிசோதனை!

INDIA

கழுத்து எலும்பு உடைந்த பாம்புக்கு ஸ்கேன் பரிசோதனை!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

ஓசூரில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் பாம்புகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மழை காலத்தில் சிறு, சிறு பாம்புகள் அதிகப்படியாக உள்ளே புகுந்து மிரட்டி வருகிறது.scan test neck broken snake bone

நேற்று கே.சி.சி நகரில் மக்களை அச்சுறுத்திய நல்லபாம்பை தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாம்புபிடி வீரரான டேவிட்மாறன் என்பவர் லாவகமாக பிடித்தார். அந்த பாம்பின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக ஓசூர் தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரில் பாம்புக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது பாம்பின் உள் எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பாம்புக்கு முதலுதவி செய்து டேவிட் மாறனே பராமரித்து வருகிறார். டேவிட்மாறன் கூறியது. ஓசூர் கேசிசி நகரில் ஒரு வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தகவல் வந்தது. அந்த பாம்பை பிடித்து வந்தேன். அப்போது கழுத்து பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் ஸ்கேன் செய்தபோது சில எலும்புகள் உடைந்திருந்தது. இதற்கு மாவுகட்டு போட வேண்டும். கால்நடை மருத்துவர்களை அணுகி தேவையான சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளேன். குணமானதும் அதை பேரண்டபள்ளி வனப்பகுதியில் விடுவேன், என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: