Type to search

உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி! – அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு!

INDIA India Top Story

உச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி! – அமைச்சர்களுக்கும் கட்டுப்பாடு!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

பிரதமர் மோடியின் பாதுகாப்பு விவகாரத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.PM modi top defense – control ministers!

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக சமீபத்தில் 4 ஆண்டுகளை நிறைவு செய்தார். இந்நிலையில், தற்போது மோடிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் 5 மாவோயிஸ்டுகள் ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையின்போது சிக்கிய கடிதத்தில், ‘ராஜீவ் கொலை போன்ற மற்றொரு நிகழ்ச்சி’ என எழுதப்பட்டிருந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் மோடியின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் ’பா.ஜ.க-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்கின்றனர்’ என சில எதிர்க் கட்சிகள் இதை விமர்சிக்கவும் செய்தனர்.

இதனையடுத்து, சமீபத்தில் பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றிருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்டிருந்த 6 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒரு நபர் மோடியின் கால்களை தொட முடிந்தது.

PM modi top defense - control ministers!

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் மோடியின் பாதுகாப்பு தொடர்பாக சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட யாரும், சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் அனுமதி இல்லாமல் மோடியின் அருகே செல்லக் கூடாது.

மேலும், மாவோயிஸ்ட் அதிகம் உள்ள சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி சில பிரிவினருக்கு இலக்காக இருக்கிறார் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அதேபோன்று சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும், மோடியிடம், வரும் தேர்தலில் ’ரோட் ஷோ’ என்றழைக்கப்படும் சாலைகளில் செய்யும் பிரசாரத்தை முழுமையாக தவிர்க்கும்படி தெரிவித்துள்ளார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: