Type to search

“இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்!

Tamil nadu

“இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்!

Share
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares

சீனாவில் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த யென், ஷாங்காய் நகரைச் சேர்ந்த ரூபிங் என்ற இந்த காதல் ஜோடி இந்து கலாச்சாரப்படி திருமணம் செய்ய விரும்பியிருக்கிறார்கள். இதற்காக நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு வந்த அவர்கள் அங்குள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்தை அணுகியுள்ளனர்.foreigners love “hindu” religious “tamil” culture!

அதனைத் தொடர்ந்து கோ பூஜை உள்ளிட்ட சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதுமணத்தம்பதிகள் முதியவர்களுக்கு பாதபஜை உள்ளிட்ட சடங்குகள் செய்தனர். தொடர்ந்து யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க அவர்கள் மாலை மாற்றிக்கொண்டனர். அதன் பிறகு ரூபிங் கழுத்தில் யென் தாலி கட்டினார் . சுற்றியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

இது பற்றி யென் கூறுகையில், இந்து கலாச்சாரம் பற்றி புத்தகங்களில் படித்து அறிந்து கொண்டதாகவும், இந்த கலாச்சாரத்தின் மேல் கொண்ட பற்றால் தமிழ்நாட்டில் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும், யென் கூறினார்.

மேலும் திருமணம் முடிந்தவுடன் மணமகன் யென் மணமகளுக்கு திலகமிட, புதுமணப்பெண் ரூபிங் நாணத்துடன் அதை ஏற்றுக்கொண்டார். அவர்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் வைபவமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு புதுமணத்தம்பதிகள் விருந்து கொடுத்து உபசரித்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares
Tags: