Categories: Tamil nadu

ஏமாற்றினார்..! கொன்றுவிட்டோம்..! – 12 நாட்கள் மர்மம்!

சென்னை, திருவான்மியூர், கங்கையம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கலியமூர்த்தியைச் சந்திக்க தினமும் நண்பர்கள் வீட்டுக்கு வருவதுண்டு. மேலும், தொழில் தொடர்பாகவும் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். இது, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், கலியமூர்த்தி, குடும்பத்தைப் பிரிந்து திருவான்மியூரில் உள்ள தி.மு.க பிரமுகர் ஒருவரின் அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். தி.மு.க. ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.Cheated ..! Killed ..! – 12 days mystery!

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதியிலிருந்து கலியமூர்த்தியைக் காணவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் ஹேமலதா, திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் விசாரணை நடத்தினார். இந்தச் சமயத்தில் கலியமூர்த்தியின் நண்பர் ஒருவர், போலீஸாரிடம் முக்கியத் தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸாருக்கு இரண்டு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைத் தொடர்ந்து போலீஸார் கண்காணித்தனர். அப்போது, அவர்களைத்தான் கலியமூர்த்தி கடைசியாக சந்தித்தத் தகவல் கிடைத்தது. இதனால், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கிழக்குக் கடற்கரைச் சாலையில் கலியமூர்த்தி ஒரு இடத்தை விற்றுள்ளார். அப்போது கலியமூர்த்திக்கும் சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிடைத்தும் அவர்கள் யார் என்று விசாரித்தோம். அவர்களுடன்தான் கலியமூர்த்தி, காரில் சென்ற விவரம் கிடைத்தது. கலியமூர்த்தியை காரில் அழைத்துச் சென்றவர்களிடம் விசாரித்தோம். அப்போது, அவர்கள் கலியமூர்த்தி எங்களை ஏமாற்றிவிட்டார். இதனால் அவரின் கதையை முடித்துவிட்டோம் என்று கூறினர்.

இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினோம். கலியமூர்த்தியை கொன்றவர்களிடம் விசாரணை நடத்தினோம். சம்பவத்தன்று கலியமூர்த்தியிடம் அவரின் நண்பர்கள் பணம் கேட்டுள்ளனர். பணத்தைக்கொடுக்காததால் அவரைக் காரில் கடத்திச் சென்று உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் அவர் இறந்துவிட்டார். தொடர்ந்து அவரின் சடலத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஒதியூர் பகுதியில் புதைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். கலியமூர்த்தியின் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் மூன்று பேரை பிடித்துள்ளோம். தற்போது கலியமூர்த்தியின் சடலத்தைத் தோண்டியெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர்.

கலியமூர்த்தியைக் கடத்தியவர்கள் அவரின் நண்பர்கள்தான். எல்லோரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு இடத்தை விற்றதில் 8,00,000 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. அந்தப்பணம் கலியமூர்த்தியிடம் இருந்துள்ளது. அதைத்தர அவர் மறுத்துவிட்டதால் அவர் கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளின் போனை போலீஸார் ஆய்வு செய்தபோதுதான் கலியமூர்த்தியைக் கொலை செய்தது தொடர்பான சில தகவல்கள், போன் உரையாடல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அதன்பிறகே போலீஸார், முருகவேல், செந்தில், மணிகண்டன் ஆகியோரிடம் விசாரித்துவருகின்றனர்.

அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். கலியமூர்த்தியின் உடலைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்ட உதவி கமிஷனர் சுப்பராயலு, இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீலன் ஆகியோர் மூன்று பேரையும் ஒதியூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கலியமூர்த்தியின் சடலத்தைத் தோண்டியெடுக்க வருவாய்த் துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு சில நாள்களாவதால் கலியமூர்த்தியின் சடலம் அழுகியிருக்க வாய்ப்புள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

16-ம் தேதி மாயமான கலியமூர்த்தி, 27-ம் தேதி கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததுள்ளது. 12 நாள்களாக அவரைத் தேடிய போலீஸாருக்கு கலியமூர்த்தி கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. இது, அவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

34 mins ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

1 hour ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

2 hours ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

2 hours ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

3 hours ago

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர்…

3 hours ago