Type to search

17 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

India Head Line Tamil nadu

17 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தினகரன் அணியைச் சேர்ந்த 17 பேர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.17 MLAs continue trial supreme court today

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதனால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக விமலா விசாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தவிர்த்து எஞ்சிய 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதமாகும் என்பதால் அங்கிருந்து வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்கிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: