Type to search

கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!

INDIA

கள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்!

Share
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares

அசாம் மாநிலம், நாகோன் மாநிலத்தில் உள்ள துபுகி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அருகிலுள்ள ஜுமுர்ஹூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு இரவு நேரத்தில் செல்வதை கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளனர்.villagers made whole night sculpture pair!

ஏற்கெனவே திருமணமான இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் கிராம மக்கள், பார்த்ததால் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை விரட்டிப்பிடித்த கிராமத்தினர், அந்தப் பெண்ணையும், இளைஞரையும் அடித்துத் தாக்கியுள்ளனர்.

திருமணம் செய்த தங்கள் கணவன் மற்றும் மனைவிக்கு இருவரும் துரோகம் இழைத்ததாகக் கூறி இரவு முழுவதும் அடித்துத் துன்புறுத்தியதோடு, கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் அப்பெண்ணிற்கு மொட்டையும் அடித்துள்ளனர். பின்னர் இது குறித்து அடுத்த நாள் காலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போது இருவரின் ஆடைகளும் கிழிந்த நிலையில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதால் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் காவல்துறையினர்.

இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக நாகோன் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரிபுல் தாஸ் கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களே சட்டத்தை கையிலெடுத்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடித்துத் தாக்கிய 3வது சம்பவம் இதுவாகும்.

முன்னதாக கடந்த ஜூன் 8ஆம் தேதி, கங்திலங்ஸோ நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் இருவரை குழந்தை கடத்தல்காரர்கள் என்று எண்ணி கிராமத்தினர் அடித்து தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக மரணமடைந்தனர்.

இதே போல கடந்த வாரம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள புகூர்புர் என்ற கிராமம் வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஜோடி ஒன்றின் மீது கிராமத்தினர் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் முறையற்ற வகையில் ஊர்சுற்றுவதாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares
Tags: