Type to search

தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!

Tamil nadu

தாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒன்றாக மது அருந்திய பின்னர் ஏற்பட்ட மோதலில் தாய்மாமனை, மருமகன் குத்தி கொலை செய்தார்.son kill mother brother dagger spoon

ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் தனது மனைவியை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டில் ஆனந்தகுமாரின் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனந்தகுமார் மற்றும் அவரது சகோதரியின் மகன் கவின்குமார் ஆகியோர் ஒன்றாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது ஆனந்தகுமார் தனது சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டு தகாத முறையில் பேசியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த கவின், மாமா ஆனந்தகுமாரிடம் வாய்தகராறு செய்துள்ளார். இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. கோபம் அடைந்த கவின் வீட்டில் இருந்த தோசை கரண்டியால் ஆனந்தகுமார் வயிற்றில், 7 முறை குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் விழுந்த ஆனந்தகுமார் சம்ப இடத்திலேயே மரணமடைந்தார். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்தகுமாரின் உடலை மீட்டதோடு, கவின்குமாரை கைது செய்தனர். ராசிபுரம் டி.எஸ்.பி., ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாமாவையே சிறுவன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: