Type to search

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்!

INDIA

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

உலகில் உள்ள அனைத்து நாடுகளில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை குறித்து ராய்டர்ஸ் நிறுவனம் சார்பாக உலக நிபுணர்கள் குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதற்கான இறுதி அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. அதில் இந்தியா தான் உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, பெண் கொத்தடிமைத்தனம் என இந்தியாவில் பெண்கள் பலவகையில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.india dangerous country women society

பெண்களின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட 550 நிபுணர்களின் இந்த இறுதி முடிவில், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் பெண்களின் பாதுகாப்பின் ஆபத்தான பட்டியலில் 2ம் மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோமாலியா மற்றும் சவுதி அரேபியா நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு இடம்பிடித்த ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா மட்டுமே. 2011-ம் ஆண்டு இதேபோன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது காங்கோவும், மூன்றாவது பாகிஸ்தானும் இடம்பிடித்திருந்தது. அப்போது நான்காவதாக இடம்பிடித்துள்ள இந்தியா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த செய்தி உலகளவில் பிரபலமான பின்னும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படவில்லை, எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண்களை துன்புறுத்துதல் மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை அதிக அளவில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதாரத்திலும், விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்து வரும் இந்தியாவில் தான் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2007 முதல் 2016 வரையிலான இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்ததாகவும், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகளின் சபையில், உலகிலேயே மிகவும் மோசமான சுகாதாரம், பொருளாதாரம், கலாச்சாரம், மூடநம்பிக்கைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்த கருத்து கணிப்பில், இந்தியாதான் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கருத்துகணிப்பையும், அறிக்கையையும் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: