Type to search

மனைவிக்காக இரண்டு மகன்களை கொன்ற கணவன்!

Tamil nadu

மனைவிக்காக இரண்டு மகன்களை கொன்ற கணவன்!

Share
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares

(Husband killed two sons wife!)

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் காமதேனு நகரைச் சேர்ந்தவர் ரகுமான். கேட்டரிங் தொழில் செய்துவந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர், வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது இலங்கையைச் சேர்ந்த அனிசா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பிறகு, தமிழகத்துக்கு வந்தனர்.

இவர்களுக்கு ரியான் என்ற 6 வயது மகனும் நேஷன் என்ற 4 வயது மகனும் இருந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு  ஏற்பட்டது. இதனால், ஹனிசா, இலங்கைக்குச் சென்றுவிட்டார். மனைவியைப் பிரிந்த வேதனை ஒருபக்கம் வாட்டினாலும் குழந்தைகளுக்காக ரகுமான் வாழ்ந்தார்.

கடந்த சில தினங்களாக ரகுமான் வீடு பூட்டியே கிடந்தது.  இன்று  அதிகாலை அந்த வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அழுகிய நிலையில் மூன்று பேரும் பிணமாகக் கிடந்தனர். மூன்று பேரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர்களின் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ரகுமானின் போனைக் கைப்பற்றி விசாரித்து வருகிறோம். அவர், கடைசியாக யாருடன் பேசினார் போன்ற விவரங்களைச் சேகரித்துவருகிறோம். விசாரணையின் முடிவில்தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்” என்று தகவல் தெரியவந்துள்ளது.

tags;-Husband killed two sons wife

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares