Type to search

தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!

Tamil nadu

தாயத்து விற்க வந்து! தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம், துவரங்குறிச்சி பகுதிகளில், குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவி வருகிறது.come sell talisman! muslims bought charity blow

இந்த நிலையில், அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக, இரண்டு பேர் சுற்றி வந்துள்ளனர். தாயத்து மற்றும் ராசிக்கல் போன்றவற்றை விற்பனை செய்து வந்த அவர்கள், மாந்த்ரீகம் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள், பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் மதுரை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் சிக்கந்தர் என்பது தெரியவந்தது. இருவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

எனினும், தாயத்து என்ற பெயரில், காகிதங்களை சுருட்டி கொடுத்து ஏமாற்றியதாக, பகவதி என்பவர் அளித்த புகாரின் பேரில், இருவரிடமும் புத்தாநத்தம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: