Type to search

பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர்! – தலித் என்பதால் அடி உதை!

INDIA

பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞர்! – தலித் என்பதால் அடி உதை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

பஞ்சாயத்து தலைவர் வீட்டு முன்பாக பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற தலித் இளைஞர் ஒருவர் அடித்து உதைக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.young man drives bike fast! – kicking feet Dalit!

போபாலுக்கு அருகிலுள்ள பண்டெல்காந்த் கிராமத்தில் தயாராம் அகிர்வார் என்ற தலித் இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த கிராமத்திலுள்ள பஞ்சாயத்து தலைவர் ஹேந்த் குர்மி வீட்டின் முன்பாக வேகமாக பைக்கில் சென்றுள்ளார். அதனைப்பார்த்த பார்த்த ஹேந்த் குர்மி தயாரம் அகிர்வாரை தடுத்து நிறுத்தி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வீட்டிற்குள் வைத்து அவரும் அவருடைய சகோதரர்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், ஹேந்த் குர்மியின் சகோதரா் ஒருவர் துப்பாக்கியை வைத்து இனிமேல் இவ்வாறு வேகமாக ஒட்டினால் சுட்டுக்கொன்று விடுவதாகவும் தயாராம் அகிர்வாரை மிரட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தயாராம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் புகாரை வாங்க மறுத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை யாரோ ஒருவா் வீடியோவில் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டதால் வேறு வழியின்றி ஹேந்த் குர்மி மற்றும் அவரது சகோதரர்களான வினோத், முன்னு மற்றும் அனிருத்தா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: