Categories: Tamil nadu

தமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி! உதை!

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள்கோயில் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.waiting young man fast moving towards tamizhisai

பா.ஜ.க பிரமுகர்கள் பேசி முடித்தபின்பு கடைசியாக பேசத்தொடங்கினார் தமிழிசை சௌந்தரராஜன். அப்போது “தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் காலையில் போராட்டம் நடத்தினால் கைது செய்து மாலையில் விடுவித்துவிடுகிறார்கள். இனி அப்படி விடுவிக்க முடியாது. ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டி தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இப்போது நாங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கிறோம். இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள். பசுமைச் சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக் கூடாது. ரோடு போடக்கூடாது எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ் வெட்டாத மரமா” எனத் தமிழகக் கட்சிகளை வசைபாடிக்கொண்டிருந்தார் தமிழிசை.

தமிழிசை சௌந்தரராஜன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென மேடைக்கு ஏறிய வாலிபர், தமிழிசையை நோக்கி வேகமாகச் சென்றார். இதனால் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரைத் தமிழிசை அருகே செல்லவிடாமல் தடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழிசையை தாக்க வந்ததாகக் கூறி மேடையிலேயே பா.ஜ.க பிரமுகர்கள் அவரைச் சரமாரியாக தாக்கினார்கள். பின்பு அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மறைமலைநகர் காவலர்கள் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பானது. இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தனது உரையை முடித்துக்கொண்டார் தமிழிசை. போகும்போது, “தமிழக காவல்துறையினர் எங்களுக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை” எனக் குற்றம்சாட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார் தமிழிசை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

8 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

11 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

11 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

12 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

12 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

13 hours ago