Categories: India Head LineTamil nadu

​ “தமிழிசைக்கும்” “அன்புமணி ராமதாஸுக்கும்” ட்விட்டரில் நடந்த வார்த்தைப்போர்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? என்பது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மாநிலச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.tamizhisai & anbumani ramadas twitter fight

இதுதொடர்பாக, ட்விட்டரில் பரஸ்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்…

தமிழிசை: மத்திய அரசின் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வராதது ஏன்?

அன்புமணி ராமதாஸ்: மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008-ல் அடிக்கல் நாட்டியதும் நானே!

தமிழிசை: மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது… ஏன் தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்துமனையைக் கொண்டு வர முடியவில்லை என்று கேட்டால், தோப்பூரில் அடிக்கல் நாட்டியதை கூறுகிறார் அன்புமணி ராமதாஸ்..!

அன்புமணி ராமதாஸ்: மதுரைக்கு 2008-ம் ஆண்டில் முதன்முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என்பது, அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும்!

தமிழிசை: அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறீர்கள். நான் தந்தை நிழலில் பதவி பெறவில்லை… சாதியை வைத்து சாதிக்கவில்லை. வாரிசு என்று சொல்லி பதவியை வாரிச் சுருட்டவில்லை… மத்திய அரசில் தொடர்ந்து இரண்டுமுறை ரயில்வே இணை அமைச்சர்களை பெற்ற பாமக, அப்போது தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றாமல், தற்போது ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பது ஏன்?

அன்புமணி ராமதாஸ்: தருமபுரி-மொரப்பூர் இணைப்புத் திட்டத்திற்கும் பா.ம.க. அமைச்சர்கள் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. பின்னர் அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தாததால், அதுகுறித்து வலியுறுத்த ரயில்வே அமைச்சர்களை, கடந்த 4 ஆண்டுகளில் 16 முறை சந்தித்துள்ளேன்…!

தமிழிசை: மத்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், நாடெங்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க முறையற்ற அனுமதி வழங்கியதில் நீங்கள் காட்டிய வேகம்… விவேகம்… ஏன் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டுவர காட்டவில்லை? மருத்துவக் கல்லூரி அனுமதி தொடர்பான ஊழல் வழக்கில், இன்னமும் நீதிமன்றத்திற்கு அலைவதும் மக்களுக்கு தெரியும்..!

அன்புமணி ராமதாஸ்: வாஜ்பாய் ஆட்சியிலும் பாமகவின் ஏ.கே. மூர்த்தி ரயில்வே அமைச்சராக இருந்தார். பா.ம.க.,வை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, வாஜ்பாய் மீது சேறும், சகதியும் வீசிக்கொண்டிருக்கிறார் அரசியல் வரலாறு தெரியாத தமிழிசை…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

23 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

1 day ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 day ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

1 day ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

1 day ago