Categories: Tamil nadu

“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்” – தாய் கண்ணீர் புகார்!

வீட்டை பத்திரப்பதிவு செய்து கொண்டு தற்போது கோயிலில் பிச்சை எடுக்க விட்டிருப்பதாக மகன் மீது மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார்.son left begging temple – mother tears!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ரமணா நகரை சேர்ந்தவர் ராதாம்மாள். 75 வயது மூதாட்டி. இவருக்கு ரகு என்ற மகனும், காஞ்சனா என்ற மகளும் என மொத்தமாக இரண்டு குழந்தைகள். காஞ்சனாவிற்கு திருமணமாகிவிட்டது. கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். ராதாம்மாளின் கணவர் தவறிவிட்டார். ராதாம்மாளுக்கு அவரின் தாய்வீட்டு சீதமான ஒரு வீடு ஒன்று கிடைத்துள்ளது. அதில்தான் அவர்கள் வசித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரகு தனது தாயான ராதாம்மாளிடம் வீட்டை தன் பெயரில் எழுதி வைக்கும்படியும், கடைசி வரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். மகன் எப்படி நம்மளை கைவிட்டுச் செல்வான் என உறுதியாக நம்பிய ராதாம்மாள் வீட்டை மகன் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ஆனால் பத்திரப்பதிவுக்கு பின் ரகுவின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ராதாம்மாளை வீட்டில் வைத்து கவனிக்காமல் அவரை கோயிலில் விட்டுச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் ராதாம்மாள் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், தனது மகனான ரகு தன் வீட்டை பத்திரப்பதிவு செய்து கொண்டு தற்போது கோயிலில் பிச்சை எடுக்க விட்டிருப்பதாக கூறியுள்ளார். எனவே கோயிலில் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே மூத்தமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007 பிரிவின் கீழ் ரகு மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்! – எஸ்.வி.சேகர்!

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.bjp's state president ready take charge - sv.sekar india tamil…

2 mins ago

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

18 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

21 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

21 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

22 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

22 hours ago