Categories: India Head LineTamil nadu

ஜெயலலிதா நினைவிடம் உறுதியா? இல்லையா? தமிழக அரசு பதில்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தொடர்ந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ப்பிட்டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.jayalalithaa’s memory stable?? government response!

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் வகையில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 5,571 சதுர மீட்டர் பரப்பில் மட்டுமே ஜெயலலிதா நினைவிடம் அமைய உள்ளதாகவும், 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது மட்டும் தான் மத்திய கடலோர ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனால், ஜெயலலிதா நினைவிடத்திற்கு மத்திய அமைப்பிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதா நினைவிடம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவோ அல்லது தொழிற்சாலையோ அல்ல என்றும், நினைவிடம் கட்டுவதற்கால அனைத்து துறைகளிடமும் அனுமதி பெற்ற பிறகே அதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளதாகவும் விளக்கமளித்தார்.

அண்ணா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடம், அண்ணன் நீச்சல் குளம் ஆகிய பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்படுவதாகவும், தெரிவித்தார். ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதால் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லை என்றும், தற்போதைய பெரும் பிரச்சனையாக இருப்பது அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகள்தான் என்றும் தெரிவித்தார்.

இந்த பொதுநல வழக்கு எவ்வித ஆதாரங்களும், காரணங்களும் இல்லாமல் தொடரப்பட்டுள்ளதாகவும், நினைவிடம் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். அரசு தரப்பு விளக்கத்தை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் அதன் பிறகு மனுதாரர் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.within year…

19 mins ago

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

41 mins ago

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

17 hours ago

பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death…

17 hours ago

இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும்,…

17 hours ago

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)

காணொளி : taking thamilisai auto-driving home offering sweet smile video இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்…

18 hours ago