Categories: INDIA

ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை!

மகராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தின் ததாலா பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி தனது மனைவியுடன் சென்ற விவசாயி ஒருவர் பயிர்க் கடனுக்காக விண்ணப்பித்திருந்தார்.crop loan sexual harassment farmer wife

இந்நிலையில் அந்த வங்கியின் மேலாளரான ராஜேஸ் ஹிவாசே, விவசாயியின் விண்ணப்ப படிவத்தில் இருந்த அவரின் மனைவியின் செல்போன் எண், முகவரி ஆகியவற்றை எடுத்து, அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பயிர்க் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் மேற்கொண்டு கடன் பெற வழிவகை செய்ய வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொலைபேசியில் அழைத்தது மட்டுமல்லாமல் அந்த வங்கியில் பணியாற்றும் உதவியாளர் (Peon) மனோஜ் சவான் (வயது 37) என்பவரை விவசாயியின் வீட்டிற்கே அனுப்பி வைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு நேரிலும் வற்புறுத்தச் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயியின் மனைவி, வங்கி மேலாளரின் செயல் குறித்து மல்காபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வங்கி மேலாளர் ஆசைக்கு இணங்குமாறும் செல்போனில் பேசும் உரையாடலை பதிவு செய்து ஆடியோ ஆதாரமாகவும் அளித்துள்ளார். இந்த விவகாரம் கடந்த வியாழக்கிழமையன்று மகராஷ்டிராவில் பூதாகரமாக வெடித்த நிலையில், புல்தானா மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தலைமையேற்று கண்காணிப்பார் என்று மாநில அரசு அறிவித்தது.

இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்து, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த வங்கி உதவியாளர் மனோஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். வங்கி மேலாளர் ஹிவாசே, தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

48 mins ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

1 hour ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

2 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

3 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

3 hours ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

4 hours ago