வீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்! – அதிர்ச்சி வீடியோ!
Share

பிஜே புயான் என்பவரின் வீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர் ஒடிசா கிராம மக்கள்.cobra babies living house! – shock video!
ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின், வீட்டில் மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்திருக்கிறார். பாம்பு இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் அஞ்சிய குடும்பத்தினர், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதையடுத்து, பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிஜே புயான் வீட்டுக்கு விரைந்த மீட்புக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 100-க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள், குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து, வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், நாகப் பாம்புக் குட்டிகளைப் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர். மேலும், நாகப்பாம்பு குட்டிகளின் தாய் நாகப் பாம்பை, பிடிக்க அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர் கிராம வாசிகள்.
source : The Times of India
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- சென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி! (படங்கள் இணைப்பு)
- தமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி! உதை!
- அரசாங்கத்தின் கடமை தியாகமல்ல! – பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசன்!
- ஃபேஸ்புக் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!
- “தப்பு யார் பக்கம்னு அவங்க மனசாட்சிக்குத் தெரியும்” – பாலாஜியின் அம்மா!
- ஆபாச படத்தால் தாக்கப்பட்ட கேரளா மாடல் அழகி “கிலு ஜோசப்”
- ஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு!
- ஆளுநருக்கு எதிராக போராடினால் ஏழாண்டு சிறை!(காணொளி)
- 8 வழிச்சாலை மிகவும் அவசியம்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- இன்று தமிழக சட்டப்பேரவையில் புயல் வீசும் என எதிர்பார்ப்பு!
- 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!
- “தமிழிசைக்கும்” “அன்புமணி ராமதாஸுக்கும்” ட்விட்டரில் நடந்த வார்த்தைப்போர்!
- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் முழுமையாக அகற்றம்!