Categories: INDIA

வரதட்சணை கேட்ட மணமகனுக்கு பாராட்டு! – அப்படியென்ன கேட்டிருப்பார்?

ஒடிசாவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வரதட்சணை கேட்டதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறார். நம்ப முடியவில்லை அல்லவா? அவர் வரதட்சணையாகக் கேட்டது பணம், பொருளை அல்ல… மரக்கன்றுகளை…!appreciate groom dowry – heard? india

ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்தில் உள்ள பாலபத்ரபூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர், சரோஜ் காந்த் பிஸ்வால். இவர், அதே கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவருக்கும் ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது ரேஷ்மியின் பெற்றோர்களிடம் சரோஜ், `எனக்கு வரதட்சணையாக 1,000 மரக்கன்றுகள் வேண்டும். என் திருமணத்தின் அடையாளமாக என் கிராமத்தில் அவற்றை நட்டுவைக்கிறேன்’ என்றார். அதைக்கேட்ட பெண் வீட்டாருக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. அதே சமயம், மணமகன் தரப்பில் பலத்த எதிர்ப்பு. சரோஜ் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

ஜூன் 22-ம் தேதி சரோஜ் – ரேஷ்மியின் திருமணம் எந்தவித ஆடம்பர செலவுகளும் இன்றி எளிமையாக நடந்தது. மாப்பிள்ளை கேட்ட வரதட்சணையை லாரியில் கொண்டுவந்து இறக்கினர் பெண் வீட்டார். திருமணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

`எனக்கு வரதட்சணை வாங்குவது பிடிக்காது. மரங்களின் முக்கியத்துவம் பற்றி என் கிராம மக்களுக்கு எடுத்துரைக்கவே என் மாமனார் வீட்டில் சீதனமாக மரக்கன்றுகளைத் தாருங்கள் என்றேன்’ என்று கூறும் சரோஜுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia…

11 hours ago

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news முதலமைச்சர் மற்றும்…

12 hours ago

முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

12 hours ago

முதல்வர் பதவியை பிடிக்க தினகரன் முயன்றார்! – அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டு இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.dinakaran trying posting chief…

13 hours ago

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்! – பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.first airport sikkim - narendra modi opened india tamil news…

14 hours ago

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.film producer complains tamil…

15 hours ago