Type to search

பாலியல் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டேன் – பிரபல மலையாள நடிகை!

INDIA India Head Line

பாலியல் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டேன் – பிரபல மலையாள நடிகை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

( very much affected  sexual torches)

மலையாள திரைத்துறையிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளார் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹாலிவுட்டில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்திய திரைத்துறையிலும் இவ்வாறான புகார்களும், சர்ச்சைகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி படவாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைப்பதாக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டியதோடு போராட்டத்திலும்  ஈடுபட்டு  பரபரப்பை  ஏற்படுத்தினார்.

மேலும் , அதைத்தொடர்ந்து அமலாபால், ராதிகா ஆப்தே, பார்வதி, சுனிதா ரெட்டி ஆகியோரும் திரைத்துறையில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தனர்.

நடிகைகள் தான் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராட வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது. திரைத்துறைக்கு வரும் நடிகைகளை சிலர் மூளைச்சலவையும் செய்கின்றனர் என்றார் ஹனிரோஸ்.

அதோடு , மலையாளத்தில் தான் நடித்த முத்தக் காட்சியை படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தியது தனக்கு வேதனையாக இருந்ததாகவும் ஹனிரோஸ் தெரிவித்துள்ளார்.

tags;-was very much affected  sexual trauma

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like