Type to search

சென்னை கிண்டியில் ITI மாணவர் அடித்து கொலை!

Tamil nadu

சென்னை கிண்டியில் ITI மாணவர் அடித்து கொலை!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சிவகுமார் கிண்டி தொழில்பேட்டையில் தமிழ்நாடு அரிசின் தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.யில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் டிப்ளமோ பயின்று வந்தார். வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளைக்குப் பின், அவர் வகுப்புக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கூறிய நிலையில், மகன் வீடு திரும்பவில்லை என சனிக்கிழமையன்று காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.ITI student beaten killed chennai tamilnadu

இந்நிலையில், மத்திய தொழில்நுட்பக் கல்வி நிலைய விடுதிக்குப் பின்புறமுள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே உள்ள புதர் பகுதியில் சடலம் கிடப்பதாக அதன் காவலாளி பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். கிண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது மார்பு, கழுத்தில் கத்திக் குத்து காயமும், இடிந்த கட்டிடக் கற்கள் மீது தலை மோதச் செய்ததன் தடயங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

ITI student beaten killed chennai tamilnadu

சடலம் அழுகும் நிலையில் இருந்ததால் முன்பே கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்றும், போலிசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில், அச்சடலம் சிவகுமாருடையதுதான் என ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஐ.டி.ஐ.-க்கும் அதனருகில் உள்ள சி.டி.ஐ.-க்கும் இடையே உள்ள மதில்சுவர் மீது ஏறி மாணவர்கள் அவ்வப்போது வந்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. வெளி ஆட்கள் யாரும் வந்து செல்ல வாய்ப்பில்லை என்பதால், மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: