Type to search

தெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! – 17 பேர் பலி!

INDIA

தெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! – 17 பேர் பலி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

தெலுங்கானா மாநிலம், யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று மூசிநதி கால்வாயில் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது வேமுலகொண்டா பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் டிராக்டரில் ஏறியுள்ளனர். இதில் பெண்கள், அவர்களது குழந்தைகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர்.tractor crash telangana state – 17 killed!

சிறிது தொலைவு சென்ற நிலையில், டிராக்டர் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து, அந்த டிராக்டர் அருகில் இருந்த மூசிநதி கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களையும், படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களையும் மீட்டனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: