Type to search

கள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை!

Tamil nadu

கள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை!

Share
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    22
    Shares

சென்னை, மயிலாப்பூர் கேசவப்பெருமாள் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் – மீனாட்சி தம்பதி, அந்தப் பகுதியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், மீனாட்சியின் தங்கை மைதிலியை மகள் போல் வளர்த்து வந்தனர். மைதிலிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.sister killed sister denounced love chennai

இந்த நிலையில், கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மலிங்கம், 2017-ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார். இதேபோல், அவரது மனைவியும் உடல்நலக்குறைவால் 11-ஆம் தேதி உயிழந்தார்.

இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, தர்மலிங்கத்தின் சகோதர் குமார்,  மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.  இந்த புகார் மீது போலீசார் சரிவர விசாரணை நடத்தாமல் இருந்த நிலையில், தர்மலிங்கம் – மீனாட்சியின் பிரேத பரிசோதனை அறிக்கையை குமார் காவல் நிலையத்தில் அளித்தார். அந்த அறிக்கையில்,  இருவரின்  உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இது கொலை என்று முடிவுக்கு வந்த போலீசார், இந்த கொலையை செய்தது யார்? என விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, தர்மலிங்கம் – மீனாட்சியின் வங்கிக் கணக்கில் இருந்து மருத்துவ செலவிற்காக  ரூ. 17 லட்சத்தை எடுத்த மைதிலி, குறைந்த அளவே செலவு செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மைதிலியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கள்ளக்காதலை எதிர்த்ததாலும், சொத்துக்காகவும், அக்காவையும், அவரது கணவரையும் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து மைதிலியும், அவரது காதலன் பாலமுருகனும் கொலை செய்தது தெரியவந்தது.

ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் மைதிலிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை தர்மலிங்கமும் – மீனாட்சியும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தர்மலிங்கத்தையும், மீனாட்சியையும் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். மேலும் அவர்களை கொலை செய்தால் அவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கலாம் என்றும் சதி செய்துள்ளனர்.

தர்மலிங்கத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் மதுவில் மெல்லக் கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதே விஷத்தை மீனாட்சிக்கும் சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து மைதிலி மற்றும் அவரது கள்ளக்காதலன் பாலமுருகனை  போலீசார் கைது செய்தனர். மேலும் மீனாட்சியின் மற்றொரு சகோதரி லதாவிற்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தவிர மைதிலியின் கணவர் பிரவீண் மீதும் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அடுத்தடுத்த சந்தேகங்களும் திருப்பங்களும் அரங்கேறி வரும் நிலையில், இதில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    22
    Shares
Tags: