Type to search

ஆயுள் தண்டனை கைதி வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

Tamil nadu

ஆயுள் தண்டனை கைதி வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

வேலூர் மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த கஜேந்திரன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் சிறையில் கடந்த 1998-ம் ஆண்டில் அடைக்கப்பட்டார்.life imprisoned vellore jail tamilnadu

சில ஆண்டுகளுக்கு முன் பரோலில் சென்ற நிலையில், கஜேந்திரன் திடீரன தலைமறைவானார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் போலீஸார் கஜேந்திரனை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர் சிறையில் உள்ள கழிவறையில் இன்று அதிகாலை லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பிற கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறை உயர் அதிகாரிகள் அங்கு வந்து கஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்கைதி ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: