Type to search

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர்! – தமிழக முதல்வர்!

Tamil nadu

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர்! – தமிழக முதல்வர்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சேலம் – சென்னை 8 வழிச் சாலைக்காக பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.Farmers willing give land – chief minister tamil nadu

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு நிலம் வழங்க சில விவசாயிகளே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

8 வழிச் சாலை திட்டத்திற்காக தருமபுரியில் எல்லைக்கல் நடும் பணி நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்த அவர், சேலத்தில் 30 கிலோ மீட்டருக்கு எல்லைக்கல் நடும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் 6 கிலோ மீட்டருக்கான பணிகளே உள்ளதாகவும் கூறினார். வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை உருவாக்குவது அரசின் கடமை என்றும், அதற்காக மத்திய அரசு எட்டு வழிச்சாலை அமைக்க முன்வந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாமக்கல்லில் திமுக-வினர் சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் அமைய வாய்ப்புள்ளதால் விமான நிலைய விரிவாக்கம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: