Categories: INDIAIndia Head Line

பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தங்களுக்கு தாங்களே ஒரு வரம்பை வகுத்துக்கொள்ள வேண்டும் என அந்த மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக தலைவருமான லால் சிங் தெரிவித்துள்ளார்.BJP leader threatens journalists BJP

சில மாதங்களுக்கு முன், ஜம்மு – காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது பெரும் பரபரப்பு எழுந்தது. பல தரப்பிலிருந்தும் இதற்கு கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியொன்றில் கலந்துகொண்டவர்தான் லால் சிங். இதன் காரணமாக, அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.

இதனிடையே, தன்னைப் பற்றி பத்திரிகைகளில் தவறான செய்திகள் வெளியாவதாக லால் சிங் குறை கூறி வந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்விடும் வகையிலான கருத்து ஒன்றை லால் சிங் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதா? என்ற தங்களது நிலைப்பாட்டுக்கும், செய்திகளை அதன் உண்மைத் தன்மையுடன் வெளியிடுவதற்கும் இடையே தங்களுக்கு தாங்களே ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் அவர்களுக்கும் ஏற்படும் என்றார் லால் சிங்.

‘ரைசிங் காஷ்மீர்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோன்ற நிலையை காஷ்மீர் பத்திரிகையாளர்கள் சந்திக்கக் கூடும் என்ற ரீதியில் லால் சிங் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஜம்மு – காஷ்மீர் பத்திரிகையாளர் சங்கமும், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.within year…

36 mins ago

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

58 mins ago

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

17 hours ago

பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death…

17 hours ago

இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும்,…

18 hours ago

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)

காணொளி : taking thamilisai auto-driving home offering sweet smile video இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்…

18 hours ago