Type to search

நடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்!

Tamil nadu

நடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

விஜய் வசந்த் தற்போது இயக்குநர் ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மை டியர் லிசா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.actor vijay vasanth injured box office!

இந்நிலையில் விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது.

இதையடுத்து அவர் ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் வசந்தை 3 வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: