Type to search

மாநகரப் பேருந்தை சிறைபிடித்து பேருந்து தினம் கொண்டாடிய 10 பேர் கைது!

Tamil nadu

மாநகரப் பேருந்தை சிறைபிடித்து பேருந்து தினம் கொண்டாடிய 10 பேர் கைது!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

சென்னையில் மாநகரப் பேருந்தை சிறைப்பிடித்து பேருந்து தினம் கொண்டாடிய கல்லூரி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.10 people arrested busting city bus

வெள்ளிக்கிழமை ஆவடியிலிருந்து விவேகானந்தர் இல்லம் செல்லும் பேருந்தை அண்ணா நகர் 2-வது அவென்யூவில் சிறைபிடித்த கந்தசாமி கல்லூரி மாணவர்கள், பயணிகளை இறக்கிவிட்டனர். பேருந்தின் கூரையில் ஏறிய அவர்கள், கூச்சலிட்டுக் கொண்டே பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா நகர் போலீசார் அங்கு வந்தபோது, அவர்கள் தப்பிச் சென்றனர். அவர்களை கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் தேடி வந்த போலீசார், முன்னாள் மாணவர்கள், தேவா, ஜெயக்குமார், சந்தோஷ் உள்ளிட்ட 10 பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர். இவர்கள் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த அவர்கள், எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்தனர். அவர்களை வரும் 6 -ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில், 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: