Type to search

வனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா?

Tamil nadu

வனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா?

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

கோவையைச் சார்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பரம் எடுக்கவும் 5 -க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினகுடிக்கு வந்துள்ளார். மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக டிரான் கேமராக்கள் மூலம் படம் பிடித்து வந்துள்ளனர்.1 rupee penalty catch picture forest?

புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனபகுதியையும், மாயார் அணை மற்றும் நீர் மின்நிலையத்தையும் டிரான் கேமராக்களை கொண்டு படம் பிடித்துள்ளனர். அது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மசினகுடி வனத்துறையினர் அவர்களை பிடித்து மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு பெரும் தொகையை அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

அபராத தொகையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சார்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட சுற்றுலா பயணிகளை விட்டுவிடும் படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதியில் அத்துமீறி செயல்பட்டதற்காக சிறிய தொகையையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோஷிற்கு 1 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர்.

அத்துடன் டிரான் கேமராக்களை இயக்கிய இருவருக்கு 2,000 ரூபாய் விதித்தனர். பொதுவாக இந்த புலிகள் காப்பக வனபகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பிடிக்கும் வனத்துறையினர் 10000 முதல் 50000 வரை அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் டிரான் கேமராக்களை பயன்படுத்த கூடாது என நீதிமன்றஉத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் டிரான் கேமராக்கள் மூலம் படம் பிடித்தவர்களுக்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்காமல், 1 ரூபாயை மட்டும் அபராதமாக விதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares
Tags: