Type to search

வரும் கல்வியாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் : பிரகாஷ் ஜவடேகர்

Tamil nadu

வரும் கல்வியாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் : பிரகாஷ் ஜவடேகர்

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ Prakash Javadekar announced }

வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே, நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சென்னையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் கண்டுபிடிப்புகள் குறைவாக உள்ளது என குறிப்பிட்ட ஜவடேகர், ஸ்டெதஸ்கோப், கேமராக்கள் போன்றவற்றை கூட இறக்குமதியே செய்து வருகிறோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட 200 புதிய திட்டங்களுக்கு, 600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இந்தாண்டு மேலும் 200 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும், என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.

மேலும், சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை பிரச்னையை தீர்க்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் வருவார், என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்படும் என்று தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், நீட் தேர்வுக்கான கேள்விகளில் தவறு ஏற்படுவதை தவிர்க்க, தமிழக அரசிடம் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் கேட்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்தாண்டு வேறு மாநிலங்களில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என்றும், அந்தந்த மாவட்டங்களிலேயே மையம் அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Tags: Prakash Javadekar announced

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் இந்திய இளைஞர்!

*சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!

*பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like