Type to search

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து முகத்தை சிதைத்து கொலை!

INDIA India Head Line

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து முகத்தை சிதைத்து கொலை!

Share

arrested allegedly sexually assaulted 6year child raped murdered

6 வயது குழந்தையை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து முகத்தை சிதைத்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டம் மொரினா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குவாலியர் நகரில் நடக்கும் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு சென்றனர். அவர்கள் 6 வயது தங்கள் மகளையும் அழைத்து சென்று உள்ளனர். திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்த தம்பதியினர் குழந்தையை கவனிக்கவில்லை. தனது மகளை காணவில்லை என்பதை தாமதமாக உணர்ந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வந்து சிசிடிவியை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் காட்சிகள் வெளியாகியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்திருந்த சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வெளியே தனியே அழைத்து செல்லும் குற்றவாளி சம்பந்தமான வீடியோ பார்க்கும் அனைவரின் மனதையும் கதிகலங்க செய்கிறது.

அந்த சிசிடிவி காட்சிப்படி திருமண கொண்டாட்டங்களுக்கு நடுவே இரவு 11.30 மணிக்கு சம்பந்தப்பட்ட குழந்தை ஒரு நபருடன் வெளியே வருகிறாள். யாரோ ஒரு நபருடன் வேகவேகமாக அந்த குழந்தை யாருமற்ற தெருவில் நடக்கிறது. குற்றவாளியும் உடன் நடந்து வருகிறான். சிறிது நேர நடைக்கு பிறகு திடீரென அந்த சிறுமி அவனிடம் இருந்து தப்பி திரும்பி வந்த வழியே ஓடி வருகிறாள்.

ஆனால் அவன் அந்த சிறுமியை அதன்பின் மீண்டும் அழைக்கிறான். எதனாலோ பயப்பட்ட 6 வயது சிறுமி அவன் பின்னாலேயே செல்கிறாள். அதோடு சிசிடிவி காட்சியில் இருளாகிருக்கிறது. பார்ப்பவர் மனதிலும். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் குற்றவாளி மட்டும் தனியே திரும்பி வருவதற்கான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

அதன் பின்னர் அந்த சிறுமி அடுத்த நாள் காலை பொலிஸாரின் தேடுதலுக்கு பிறகு திருமணம் நடந்த இடத்திலிருந்து 500மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சடலமாக முகம் சிதைந்து கண்டுபிடிக்க படுகிறாள்.

சடலமாக சம்பவ இடத்தில் சிறுமியின் சடலத்தை பார்த்த உடனேயே இது கொடூரமான முறையில் நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் என தெரிந்ததாக இந்த விசாரணையை மேற்கொண்ட தர்மராஜ் மீனா எனும் மூத்த காவல் துறை அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த குற்றத்தில் திருமண நிகழ்வில் சமைக்க வந்திருந்தவர்களில் ஒருவனை கைது செய்துள்ளது. மேலும் அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றத்தை அவன் செய்யும்போது அவனிடம் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக காணப்படுவதால் இதில் மேலும் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

arrested allegedly sexually assaulted 6year child raped murdered

More Tamil News

போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!

கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

​​​15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Tamil News Group websites :

Technotamil.com

Tamilhealth.com

Sothidam.com

Cinemaulagam.com

Ulagam.com

Tamilgossip.com

Tags: