Type to search

​உறவினர்களை கொலை செய்ய செய்த திட்டத்தில் பசியிலிருந்த 2 குழைந்தைகள் பலி!

INDIA

​உறவினர்களை கொலை செய்ய செய்த திட்டத்தில் பசியிலிருந்த 2 குழைந்தைகள் பலி!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ 2 children killing relatives }

மகாராஷ்டிரா மாநிலத்தில், உறவினர்களை கூண்டோடு தீர்த்துக்கட்ட உணவில் விஷம் கலந்த பெண் கைது செய்யப்பட்டார்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கத் மாவட்டம் மகாத் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் மனே – ஜோதி வர்வாஸ் தம்பதி, புதுமனை புகுவிழாவுக்காக உறவினர்களை அழைத்திருந்தனர்.

இரவு விருந்தில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்ட 120-க்கும் மேற்பட்ட உறவினர்களுக்கு ஜோதி வர்வாஸ் தனது கைப்பட உணவை பரிமாறினார்.

பசியோடு இருந்த உறவினர்கள் உணவை வயிறு நிரம்ப புசித்தனர். இந்நிலையில் உணவு சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையிலிருந்து 120 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராய்கத் மாவட்ட போலீஸார், உணவை பரிமாறிய ஜோதி வர்வாஸை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. தான் கருப்பு என்பதால், மாமானார்-மாமியார் தன்னை தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும், திருமண வாழ்க்கையில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோதி வர்வாஸ் கூறினார்.

விருந்து நிகழ்ச்சியிலும் தன்னை ஆத்திரமூட்டியதால், கோபத்தில், பாம்புகளை கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்தை பருப்புக்குழம்பில் கலந்ததாகவும், அதனை உறவினர்கள் அனைவருக்கும் தானே பரிமாறியதையும் ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: 2 children killing relatives

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் இந்திய இளைஞர்!

*சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த 23 வயது பெண்ணின் தாய்!

*பஸ்ஸில் ஏறிய மாணவி பிணமாக மீட்பு!

*2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!

*அரச அதிகாரிகளினால் கொடூரமாக அழிக்கப்பட்ட ​வாச்சாத்தி இனத்தின் கண்ணீர் சம்பவம்!

*​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: