Categories: India Top StoryTamil nadu

​சாமானியரான சம்பத்! – சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறிய கதை!

தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் டிராபிக் ராமசாமி. பொது நல வழக்குத் தொடர்வதோடு நில்லாமல் சமூகப் பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் சமூக ஆர்வலர். சாமானியரான சம்பத் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியாக மாறியதை விவரிக்கிறது இந்த செய்தி. sampath! story social enthusiast tropic ramasamy

1934 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் பிறந்த டிராபிக் ராமசாமியின் இயற்பெயர் சம்பத். அவரது தந்தை ரெங்கசாமி வடசென்னை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர். ஒரு முறை ரெங்கசாமியின் இல்லத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி தன்னம்பிக்கை உறுதியுடன் தவறுகளை சுட்டிக் காட்டு என டிராபிக் ராமசாமியைப் பார்த்துக் கூறியிருக்கிறார். சமூக அவலங்கள் மீது கவனம் செலுத்த தனக்கு அது தான் உத்வேகம் அளித்ததாக கூறுகிறார் டிராபிக் ராமசாமி.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறைக்கு உதவி செய்ததை அடுத்து காவல்துறையினர் அவரை டிராபிக் ராமசாமி என அழைத்தனர். இதனையடுத்து ஆனந்த விகடன் பத்திரிக்கை மனிதர்கள் என்ற தலைப்பிலான கட்டுரையில் டிராபிக் ராமசாமி எனக் கூறி பெருமைப் படுத்தியது. சம்பத் டிராபிக் ராமசாமியாக நிலைக்கத் தொடங்கிய தருணம் இது தான்.

1990 களில் சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகளை ஒரு வழிச்சாலையாக அப்போதைய காவல் ஆணையர் மாற்றினார். இதனால் விபத்துகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். உடனடியாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து ஒரு வழி சாலையை மாற்றி அமைத்தார். இதனைத் தொடர்ந்து பல சமூகப் பிரச்சனைகளுக்காக பொது நல வழக்குகளைத் தொடர்ந்த டிராபிக் ராமசாமி சில தேர்தல்களிலும் போட்டியிட்டார். 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கிய அவர், 2015ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலைதாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

தேர்தல்களில் வெற்றி பெற முடியாவிட்டாலும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்காக டிராபிக் ராமசாமி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். டிராபிக் ராமசாமி எதிர்ப்பார்ப்பது இந்த சமூகம் கேள்வி கேட்க வேண்டும், தைரியமாக, தன்னம்பிக்கையோடு யாராக இருந்தாலும் தவறை சுட்டி காட்ட வேண்டும். அந்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கு வர வேண்டும் என்பது மட்டுமே. இவ்வாறு மக்களின் பிரச்சனை ஓரளவாவது தீர வேண்டும். அதுவரை தன்னுடைய போராட்டம் தொடரும் என தளராமல் தெரிவிக்கிறார் டிராபிக் ராமசாமி போராட்டங்கள் என்றாலே தீவிரவாதம் என கூறும் சூழலில் தனிமனிதனாக சமூகத்திற்காக, அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டம் தான் தீர்வு தரும் என தன்னம்பிக்கையோடு நிற்கும் டிராபிக் ராமசாமி தான் ஆகச் சிறந்த உதாரணம் என்பதில் மிகையில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

15 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

18 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

18 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

19 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

19 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

20 hours ago