Type to search

எஸ் ஐ அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்ஸ் கில்லாடி!!

Tamil nadu

எஸ் ஐ அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்ஸ் கில்லாடி!!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

(police murder one person arrest)

கொரட்டூர் காவல் நிலையத்தில் போலீசை கட்டிப் புரண்டு சண்டை போட்டு, எஸ்.ஐ.யையும் பீர் பாட்டிலால் கொல்ல முயன்ற போதை வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

.சென்னை பாடி மேம்பாலம்- கொரட்டூர் சந்திப்பில் ஏட்டு லோகநாதன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பைக்கில் அவ்வழியாக  வந்த வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து, சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பைக்குடன் இரவு 11.30 மணியளவில் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.விசாரணையில், வில்லிவாக்கம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (27) என்பதும், உணவு பொருட்களை வினியோகம் செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் மீது போலீசார் சிறு வழக்கை பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர். பின்னர் வாலிபரிடம், காலையில் வந்து பைக்கை வாங்கி செல்லும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து சென்ற மணிகண்டன் நள்ளிரவு 1.15 மணியளவில் மீண்டும் போதையில் கொரட்டூர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சித்துராஜ் (42) என்பவரிடம், ‘‘என் மீது எப்படி கேஸ் போடலாம்?’’ என்று வாய்த்தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதால் உள்ளே இருந்த எஸ்.ஐ புருஷோத்தமன் ஓடிவந்து, இருவரையும் விலக்கிவிட முயற்சி செய்தார். ஆனால் மணிகண்டன் எஸ்.ஐயை கீழே தள்ளிவிட்டு ஏட்டு சித்துராஜுடன் கட்டிப்புரண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், படுகாயம் அடைந்த ஏட்டு சித்துராஜை சக போலீசார் மீட்டு, கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இப்புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

tags;-police murder one person arrest

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் 


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares