Categories: India Top StoryTamil nadu

​இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவில்!

{ Murugan temple built Muslims }

புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோயிலை கட்டியது இஸ்லாமியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் அந்த கோயிலை பற்றி தற்போது பார்ப்போம்.

புதுச்சேரி ரயில் நிலைய வாயிலின் அருகே உள்ள சாலைக்கு எதிரே அழகாய் அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில்.
அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இக்கோயிலை கட்டியவர் மதுரையை பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ்.

1940ம் ஆண்டுகளில் அவரது முன்னோர்கள் புதுச்சேரியில் குடியேறிய பின், கடவுள் முருகன் மீது மிகுந்த பற்று கொண்டதால் முருகன் கோவிலை கட்ட எண்ணியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டி வந்தது. எனினும், கடந்த 1970ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டி அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலை கட்டி முடித்தார் முகமது கெளஸ். 1977-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார்.

பின்னர் கோயில் கட்டியவரின் பெயருடன் இணைந்து கௌசிக பாலசுப்பிரமணிய சாமி திருக்கோயில் என பெயர் பெற்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.

சித்ரா பவுர்ணமி, வைகாசிப் பெருவிழா,கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் இத்திருக்கோயில் மின்னுகின்றது. 2003-ம் மரணமடைந்த முகமது கௌஸூக்கு பின் அவரது மகன் முகமது காதர் தற்போது கோயிலை நிர்வகித்து வருகின்றார்.

இக்கோயிலுக்கு கடந்த 2002ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது 3வது முறையாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மதங்களின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக இன்று உயர்ந்து நிற்கின்றது இந்த கௌசிக பாலசுப்ரமணிய கோவில்.

Tags: Murugan temple built Muslims

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

45 mins ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

3 hours ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

3 hours ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

4 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

5 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

5 hours ago