Type to search

எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் மூன்று அமைச்சர்கள் ஆய்வு!

India Head Line Tamil nadu

எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் மூன்று அமைச்சர்கள் ஆய்வு!

Share

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கை இன்றே முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.explore three ministers madurai site

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளும் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். பின்னர் அமைச்சர்கள் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பணிகளை வேகமாக, விரைவாக முடுக்கிவிடும் நோக்கத்துடன் ஆய்வுக்காக வந்ததாகவும், எவ்வித தாமதமும் இன்றி பணிகள் தொடங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைப்பதற்காக மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும். 198.27 ஏக்கர் நிலம் மொத்தமாக கையகப்படுத்தி தயார் நிலையில் உள்ளது.

மேலூர் குடிநீர்த் திட்டத்தில் இருந்து 5 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்திருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இருவழித் தடங்களில் 20 மெகாவாட் மின்சாரம் அளிப்பதற்கு தேவையான பணிகள் தொடங்க உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்திலிருந்து நான்கு வழிச் சாலையை இணைக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்களை மருத்துவமனை அமைய உள்ள இடத்திலிருந்து தள்ளி அமைக்க அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இப்படி மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை விரைவில் நிறைவேற்றி, எவ்வித தாமதமும் இல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஆக்கப்பூர்வமான பணிகள் தொடங்கப்படும் என்றும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இரண்டு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்படும். 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும். 100 மருத்துவப் படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமையும். 100 சிறப்பு மருத்துவர்கள் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிவார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் எனவும், இது தமிழக மக்களுக்கு கிடைத்த மணி மகுடம் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags:

You Might also Like