Type to search

காஷ்மீரில் கமாண்டோ படை தயார்

INDIA

காஷ்மீரில் கமாண்டோ படை தயார்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

Enforcement Directorate declare industrialist economic culprit abroad

ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு கமாண்டோ படையினர், அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் எல்லையோர கிராமங்களில், பாக்., பயங்கரவாதிகள், திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள், கிராமங்களைவிட்டு வெளியேறினர்.

இந்த தாக்குதல்களில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ரமலான் மாதத்தில், ராணுவ நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி, பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, பா.ஜ., வாபஸ் பெற்றது. இதையடுத்து, முதல்வர் மெஹபூபா முப்தி, ராஜினாமா செய்தார். ஜம்மு – காஷ்மீரில், கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு படையின் சிறப்பு கமாண்டோ படையைச் சேர்ந்த, 100 வீரர்கள், ஸ்ரீநகர் அருகே உள்ள எல்லை பாதுகாப்பு படையின் முகாமில், கடத்தல் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம், இலக்குகளை துல்லியமாக தாக்கும் அதிநவீன துப்பாக்கிகள், கட்டடங்களை ஊடுருவிச் செல்லும் ரேடார் கருவிகள் உட்பட, நவீன போர் கருவிகள் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்கள் தரப்பில், உயிர் சேதங்களை தவிர்ப்பதற்காக, கமாண்டோ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் விரைவில், தங்கள் அதிரடி தாக்குதல்களை துவங்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Enforcement Directorate declare industrialist economic culprit abroad

More Tamil News

போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!

கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

​​​15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Tamil News Group websites :

Technotamil.com

Tamilhealth.com

Sothidam.com

Cinemaulagam.com

Ulagam.com

Tamilgossip.com

 

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: