Type to search

ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

INDIA

ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ rahul gandhi meeting amalhassan }

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய கமல்ஹாசன் அரசியல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி 21 – ம் திகதியன்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சிப் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லி தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் கமல் ஆஜர் ஆனார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கட்சிப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் பணிகள் இம்மாத இறுதியில் முடிவடையும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றது. இச்சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியளித்ததாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.

ராகுலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ராகுலுடன் அரசியல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறினார்.

Tags: rahul gandhi meeting amalhassan

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like