Categories: INDIAIndia Top Story

இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

{ Passport Hindu brutality married couple }

இஸ்லாம் மதத்தை சேர்ந்த முஹம்மது சித்திக் என்பவருக்கும் இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் என்பவருக்கும் 2007ல் கலப்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

அவர்களுக்கு தற்போது 6 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து ஜூன் 20ம் திகதி இருவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் முதல் மற்றும் இரண்டாவது சுற்று நேர்காணலுக்கு பிறகு 3வது சுற்றில், தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது கணவர் கூறுகையில், அதில் தனது மனைவி தன்வி செத் C5 கவுண்டருக்கு நேர்காணலுக்கு சென்றிருந்தார்.

அப்போது விண்ணப்பத்தில் கணவரின் பெயர் முஸ்லிம் பெயராக இருந்ததை கண்ட விகாஷ் மிஸ்ரா எனும் அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார், அதனை தொடர்ந்து அவர் தன் மனைவியை திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

மேலும் கணவரின் பெயரை இந்து பெயராக மாற்றினால் தான் பாஸ்போர்ட் வழங்கப்படும், இல்லை என்றால் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு சித்திக்கின் மனைவி, “எனது கணவர் முஸ்லிமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை” என பதிலளித்துள்ளார்.

இதை கேட்ட அதிகாரி அவரை வெளியில் போகுமாறு கடும் வார்த்தைகளால் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்தார்.

இதையடுத்து சித்திக்கை அழைத்து பேசிய மிஸ்ரா, நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது, என அவரையும் அவமானப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்த ஆர்.பி.ஓ அதிகாரி, நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்து, நடந்தது குறித்து ஒரு கடிதத்தில் விரிவாக எழுதி தரும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து நிகழ்ந்தது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், அதில், “ஆதங்கத்துடன் இதை பதிவிடுகின்றேன், கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Tags: Passport Hindu brutality married couple

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*ராகுல் காந்தியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை – கமல்

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட தவறு: ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!

*மதுரையில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Kowshalya V

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

12 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

15 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

16 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

17 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

17 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

18 hours ago