Type to search

பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு மங்கை!

Tamil nadu

பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு மங்கை!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

{ Miss India Anukeerthy }

2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. 29 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்ட போட்டிகளில் தகுதி பெற்றனர்.

நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டியில், கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், சென்னையை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் பயிலும் அனுக்ரீத்திக்கு மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார்.

ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அணு இவ்வருடம் நடைபெறவிருக்கும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags: Miss India Anukeerthy

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*இந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட்: இஸ்லாமிய ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்!

*இந்த மாதிரி ஒரு திருமண ஊர்வலத்தை இதுவரை பார்த்திருக்கவேமாட்டீங்க! ( படம் இணைப்பு )

*இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகிய குடும்பத்தினர்!

*பெண்களை விட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்: தேசிய சுகாதார கழகம்!

*காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!

*எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 நிபந்தனைகள்: மத்திய அரசு அறிவிப்பு!

*சேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!

*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து! மக்களே எச்சரிக்கை”

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: